பிரதமர் மோடியின் கலந்துரையாடல் தள்ளிவைப்பு : ஜனவரி 16-க்கு பதில், ஜன.20-க்கு மாற்றம்

மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, வரும் இருபதாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-01-01 20:05 GMT
இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுடன், பிரதமர் மோடி வரும் பதினாறாம் தேதி கலந்துரையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு சம்பந்தமான மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவது குறித்து அவர் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சி, வரும் இருபதாம் தேதிக்கு ஒத்திவைக்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல், மகர சங்கராந்தி, லோகிரி போன்ற திருவிழாக்கள் வருவதால், தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினோறாம் தேதியும், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதியும், புது டெல்லியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்