குற்ற வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்

குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதி வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை உரிய காரணங்களுக்காக, காணொலி காட்சி மூலம் விசாரித்து, சாட்சியத்தை பதிவு செய்யலாம்.

Update: 2020-01-01 12:45 GMT
குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதி வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை உரிய காரணங்களுக்காக, காணொலி காட்சி மூலம் விசாரித்து, சாட்சியத்தை பதிவு செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் முன்னிலையில் காணொலி காட்சி  மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த பதிவேட்டை, அனைத்து கீழமை நீதிமன்றங்களும் பராமரிக்க வேண்டும். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டால், அவர் வேறு ஏதேனும் வழக்கில் தொடர்பு உடையவரா என்பதை அறிந்த பிறகே, அவரை விடுதலை செய்ய வேண்டும். என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, வழக்கு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பது, தீர்ப்பில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், அபராதம் விதிப்பது, இழப்பீடு வழங்குவது என, கீழமை நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்