New Bill | எதிர்ப்புகளை மீறி மசோதா அறிமுகம் - அமலுக்கு வந்தால் என்ன நடக்கும்?
காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக அதிகரிக்கும் மசோதாவை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.
சப்கா பீமா சப்கா சுரக்ஷா என்ற மசோதாவை அறிமுகம் செய்த நிதி அமைச்சர், காப்பீட்டுத் துறையில் தற்போது அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதமாக உள்ள நிலையில் அதனை 100 சதவீதமாக அனுமதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு காப்பீட்டு நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக்கொள்ள அனுமதிக்க வழிவகை செய்கிறது.
இதன் மூலம் சந்தையில் காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு, பாலிசிதாரர்கள் வாங்குவதற்கு அதிக தேர்வுகள் மற்றும் வாய்ப்புகளை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு அறிமுக நிலையிலேயே திமுக காங்கிரஸ் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.