மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்
மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய கோட்டாவில் முறையான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.;
மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய கோட்டாவில் முறையான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டம் உள்ள நிலையில், இந்த இட ஒதுக்கீட்டு பின்பற்றப்படுவதில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்கிற அடிப்படையிலேயே மருத்துவ சீட்டுகள் ஒதுக்கப்படுவது, சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.