உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கட்டுப்பாடுகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;

Update: 2019-12-26 20:20 GMT
வாக்குப்பதிவு சமயத்தில், வாக்குச் சாவடிகளுக்கு அருகே, கட்சியினர் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தேர்தல் புகார்களை தேர்தல் பார்வையாளர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை இலவசமாக வாகனங்களில் அழைத்து செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் ஒவ்வொரு வேட்பாளரும், சொந்த உபயோகத்திற்கு, ஒரு வாகனத்தை மட்டும் பயன்படுத்தலாம் என்றும் அதை வேறு எவரும் பயன்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள், வேட்பாளர்கள், முகவர்களை தவிர, மற்றவர்கள், தேர்தல் ஆணைய அனுமதி கடிதம் பெற்றே வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நுழைய கூடாது. வாக்களிப்பதற்காக வாக்காளர்களாக மட்டும் நுழையலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்