தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்கு பின், இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.;

Update: 2019-12-26 20:15 GMT
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் கடந்த 2016ம் ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. சென்னை உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில், முதல் கட்டமாக 91 ஆயிரம் ஊரக - உள்ளாட்சி பதவி இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில், ஆயுதப்படை காவலர்கள் உட்பட 63 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.  இதுபோல, காவலர்கள் அல்லாத 14 ஆயிரத்து 500 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக,  காவல் துறை அறிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்