மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் : நினைவு நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
சென்னையில் மக்கள் டாக்டர் என பெயர் பெற்ற, மறைந்த டாக்டர் ஜெயச்சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச மருத்துவம முகாம் நடைபெற்றது.;
சென்னை வண்ணாரப்பேட்டையில், 45 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்கள் மருத்துவர் என பெயர் பெற்ற மருத்துவர் ஜெயச்சந்திரன், கடந்த ஆண்டு மறைந்தார். அவரது மறைவிற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஜெயச்சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, காசிமேடு மீனவ குடியிருப்பு பகுதியில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில், டாக்டர் ஜெயச்சந்திரனின் குடும்பத்தை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பிரபல மருத்துவமனையின் மருத்துவர்கள் பங்கேற்றனர். கண் பரிசோதனை, பல் மருத்துவம், ஈசிஜி,, எக்கோ, பெண்கள் சிறப்பு மகப்பேறு பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கப்பட்டன.