குடியுரிமை மசோதா : போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலை. மாணவர்கள் வெளியேற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சென்னை பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.;

Update: 2019-12-19 02:17 GMT
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு  தெரிவித்து 2 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சென்னை பல்கலைக்கழக மாணவர்களை போலீசார்  அப்புறப்படுத்தினர். அப்போது, மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு, போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல்  அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனிடையே, சென்னை பல்கலைக்கழகத்திற்கு 23 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், விடுதிகளை காலி செய்யுமாறு, மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் வற்புறுத்தி உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் அங்கிருந்து விடுதிகளை காலி செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்