தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் தொடக்கம் - மூங்கில், பானை மீது யோகா செய்து அசத்திய மாணவர்கள்

கும்பகோணம் செட்டி மண்டபத்தில் தேசிய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.

Update: 2019-11-24 02:55 GMT
கும்பகோணம் செட்டி மண்டபத்தில் தேசிய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.  5 வயது முதல் 17 வயது வரை,  ஏழு பிரிவுகளில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். கபிஸ்தலம் பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் சாய்ராம், பானை மீது அமர்ந்து பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து காட்டினார்.  மாணவர் முத்துகிருஷ்ணன் மூங்கிலில் தொங்கியபடி பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்