"தமிழர்களின் நிலங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை கோத்தபய ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும்" - ராமதாஸ்

இலங்கையில் தமிழர்களின் நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கோத்தபய ராஜபச்சேவிடம் பிரதமர் மோடி நேரில் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-21 08:59 GMT
இலங்கையில் தமிழர்களின் நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கோத்தபய ராஜபச்சேவிடம் பிரதமர் மோடி நேரில் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்சேவை இந்தியா வருமாறு மத்திய அரசு அழைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு அளித்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும் என அவரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவும் கோத்தபயவிடம் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்