"சரபங்கா திட்டம் - ரூ.565 கோடி ஒதுக்கீடு" - அரசாணை வெளியீடு

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை ஏரி குளங்களில் நிரப்பும் சரபங்கா திட்டத்திற்கு 565 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

Update: 2019-11-13 21:42 GMT
சரபங்கா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சேலம் மாவட்ட விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழக அரசு இதனை தற்போது அறிவித்துள்ளது

இந்த திட்டத்திற்காக நடப்பாண்டு நிதியிலிருந்து 50 கோடி ரூபாயும் அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கான நிதியில் இருந்து 515 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக 4 ஆயிரத்து 328 ஏக்கர் நிலங்கள் பயனடையும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது 

மேட்டூர் உபரி நீரை  திருப்பிவிடுவதற்காக குழாய்கள் பதிக்க  241 ஏக்கர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது மேட்டூர் அணையில் 555 மில்லியன் கன அடி உபரி நீரை இத்திட்டத்தின்கீழ் எடப்பாடி பகுதியில் உள்ள  33 குளங்களுக்கும் எம்.காளிபட்டி பகுதியில் உள்ள 67 குளங்களுக்கும் திருப்பிவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்