நீட் ஆள் மாறாட்ட விவகாரம் : மாணவர் உதித்சூர்யா முன் ஜாமின் மனு விசாரணை

ஆள் மாறாட்ட விவகாரத்தில், மருத்துவ மாணவர் உதித் சூர்யாவின் வயதை கருத்தில் கொண்டு, அவரது முன் ஜாமின் மனு ஜாமின் மனுவாக ஏற்றுப்படுவதாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-10-01 10:54 GMT
நீட்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தாம் கைது செய்யப்படக் கூடாது என, மாணவர் உதித் சூர்யா, ஜாமின் கோரி, தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவரை சரணடைய அறிவுறுத்தி இருந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளதால், ஜாமின் மனுவாக ஏற்க இயலாது என நீதிபதி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட உதித் சூர்யாவின் வழக்கறிஞர்,அவரும், அவரது தந்தையும் சரணடைய வந்த போது , சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி மாணவரின் வயது என்ன  என கேள்வி எழுப்பிய போது 20 என வழக்கறிஞர் குறிப்பிட்டார். இந்த குற்றத்திற்கு மாணவரின் தந்தை தான் காரணம் என வேதனை தெரிவித்த நீதிபதி, மாணவரின் வயதை கருத்தில் கொண்டு, முன் ஜாமின் மனு, ஜாமின் மனுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்து, விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்