"13ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு" - தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தகவல்

13ஆம் நூற்றாண்டுகளில் வடமாநிலங்களில் இருந்து இந்தி மொழி நுழைவிற்கு இப்போது போன்றே எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.

Update: 2019-09-23 12:38 GMT
13ஆம் நூற்றாண்டுகளில் வடமாநிலங்களில் இருந்து இந்தி மொழி நுழைவிற்கு இப்போது போன்றே எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள 13ஆம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் குறித்து சாந்தலிங்கம் தலைமையிலான 3பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.மேலும், கோயிலில், 800 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்து, கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை ஆவண படுத்தி ஆறு மாதங்களுக்குள் புத்தகமாக வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்