இடி, மின்னல் தாக்கி ஒரே நாளில் 6 பேர் படுகாயம் - மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் பலி

தமிழகத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர்.;

Update: 2019-09-23 01:55 GMT
திருவள்ளூர் மாவட்டம் பேரத்தூர் கிராமத்தில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 7 பேர் இடி மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்தனர். அவர்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அன்னபூரணி என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த முருகன், உஷா ஆகியோர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கலா, அற்புதம், நாகம்மாள், சின்னப்பொண்ணு ஆகியோர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, நேரில் சந்தித்து  ஆறுதல் கூறினார். பரமக்குடி அருகே குருவிபொட்டல் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள வயலில் நின்று கொண்டிருந்த எழுபது வயது மூதாட்டி சந்தியாகு அம்மாள் என்பவர், இடி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்