காரைக்குடி அழகப்பா கல்வியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி - 200 பேர் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்வியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

Update: 2019-09-15 16:27 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்வியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது மினி சப் ஜூனியர் எனும்10 வயதுக்கு உட்பட்டவர்கள், சப்-ஜூனியர் எனப்படும் 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள், ஜீனியர் எனும் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள், சீனியர் எனப்படும் 18 முதல் 25 வயது உட்பட்டவர்கள், சூப்பர் சீனியர் எனப்படும் 26  முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஐந்து பிரிவுகளாக போட்டி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் 200 பேர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுவோர், நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நெல்லையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்