மேட்டூர் அணை : பாசனத்துக்கு விநாடிக்கு 65,000 கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையில் திறக்கப்படும் நீர் விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-08 07:27 GMT
கர்நாடகாவில் இருந்து ஏற்கனவே இருந்ததை விட 5 ஆயிரம் கனஅடி குறைந்து 70 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உள்ளது. 43வது முறையாக மேட்டூர் அணை, 120 அடியை எட்டிய நிலையில், அங்கிருந்து பாசனத்துக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் டெல்டா பாசனத்துக்கான தேவை கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், அணைக்கு வரும் நீரை, அப்படியே வெளியேற்றப்படும் என தெரிகிறது. கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் கடைமடை பகுதிவரை செல்ல நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரியுள்ளனர்.   

Tags:    

மேலும் செய்திகள்