மேட்டூரில் நீர்திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-09-02 06:03 GMT
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரிப்பு காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து, 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 புள்ளி 43 அடியாகவும், நீர்இருப்பு 89 புள்ளி 43 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வரும் நிலையில், டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்