அத்திவரதர் உற்சவத்தின் 43வது நாள்... மஞ்சள், பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர்

40ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 43வது நாளான இன்று, அத்திவரதர் மஞ்சள், பச்சை நிற பட்டாடையில், செண்பகப்பூ, மல்லி மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.

Update: 2019-08-12 04:41 GMT
40ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 43வது நாளான இன்று, அத்திவரதர் மஞ்சள், பச்சை நிற பட்டாடையில், செண்பகப்பூ, மல்லி மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். திங்கள் கிழமையும், பக்ரீத் விடுமுறை நாளுமான இன்று அத்தி வரதரை அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்து வருகின்றனர். அத்திவரதர் தரிசனம் நிறைவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது..
Tags:    

மேலும் செய்திகள்