ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-23 19:52 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஆலையை இயக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தொடர்ந்து  மீறியதால், விதிகளின் அடிப்படையிலேயே ஆலையை மூட உத்தரவிடப்பட்டதாக தெரிவித்தார்.அபாயகரமான கழிவுகள் பராமரிக்க வேண்டியது ஆலையின் கடமை எனவும், அதை முறையாக  அப்புறப்படுத்த ஆலை நிர்வாகம் தவறிவிட்டதாக வழக்கறிஞர் கூறினார். நீர் நிலைகளில் தெரிந்தே மாசு ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனக் கூறிய அவர், மாநில அரசின் அனுமதியின்றி எந்த ஆலையும் திறக்க முடியாது என்றார்.மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பு வாதம் புதன்கிழமை அன்றும் தொடர்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்