நடமாடும் ஏ.டி.எம் இயந்திரத்தில் திடீர் தீ - போலீசார் குழப்பம் தீவிர விசாரணை

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான நடமாடும் ஏ.டி.எம்.இயந்திர வாகனத்தில் இருந்து 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மாயமான சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-07-12 22:29 GMT
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான நடமாடும் பணம் எடுக்கும் ஏ.டி.எம். வாகனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆம் தேதி இந்த நடமாடும் ஏ.டி.எம். மிஷினில் 10 லட்ச ரூபாய் பணம் நிரப்பப்பட்டுள்ளது. இரு நாட்களாக இந்த வாகனம் பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நடமாடும் ஏ.டி.எம். இந்த  வாகனத்தில் இருந்து மின்சாதன பொருட்களில் இருந்து திடீரென தீப்பற்றி எரிந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் ரசாயன தீயணைப்பு தெளிப்பானை பயன்படுத்தி தீயை முழுமையாக கட்டுப்படுத்தி, பணத்தை ஆய்வு செய்தனர். அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தில்  9-லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானது தெரிய வந்தது.பணத்தை திருடி விட்டு, எரிந்து சாம்பலானது போல காட்டுவதற்காக மர்ம நபர்கள் தீ பற்ற வைத்திருக்கலாம் என அடிப்படையில், கருங்கல்பாளையம் போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்