பெரிய கோயில் அருகே 500 அடி ஆழத்தில் போர்வெல் பணி : கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் - சமுக ஆர்வலர்கள் அச்சம்

தஞ்சை பெரிய கோயில் அருகே நடைபெற்று வரும் 500 அடி ஆழம் கொண்ட போர்வெல் அமைக்கும் பணியால் கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-07-10 13:04 GMT
உலக புராதன சின்னங்களில் ஒன்றாக தஞ்சை பெரிய கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலின் அருகே உள்ள பூங்காவில் 500 அடி ஆழத்துக்கு போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  பொதுவாக உலக புராதன சின்னங்களை சுற்றி உள்ள 100 மீட்டர் அளவிற்கு எந்த ஒரு கட்டிட வேலையும் செய்யக் கூடாது என்பது விதி. இந்நிலையில் இந்த பணியால் பெரிய கோயிலுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கோயில் அருகிலேயே தொல்லியல் துறை அலுவலகம் இருந்தும் இந்த பணி நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்