நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை : "பிரதமர் மோடியிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்" - மனிஷா சென் சர்மா

இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 596 இடங்களில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 'ஜல் சக்தி அபியான்' திட்ட கண்காணிப்பு அலுவலர் மனிஷா சென் சர்மா தெரிவித்தார்.

Update: 2019-07-09 04:21 GMT
இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 596 இடங்களில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 'ஜல் சக்தி அபியான்' திட்ட கண்காணிப்பு அலுவலர் மனிஷா சென் சர்மா தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருவதாக கூறினார். கீரமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக, ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்பிக்கப்படும் என்றும், அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்