மடிக்கணினி வழங்கக் கோரி மாணவர்கள் போராட்டம்...

விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-01 21:23 GMT
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், மடிக்கணினி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அப்போது மாணவர்களை சமாதானப்படுத்திய போலீசார், மனு கொடுக்க வழிவகை செய்தனர். வேலூர் மாவட்டம்(திருப்பத்தூர்) ஜோலார்பேட்டை அருகே மடிக்கணினி  வழங்காததால் திருப்பத்தூர், வேலூர் சாலையில் மறியலில் மாணவர்கள் ஈடுபட்டனர். அப்போது பேருந்தையும் மாணவர்கள் சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பன்னிரென்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் , அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வழங்குவதாக கூறிவிட்டு, நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி தருவது சரியா என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்