கொடைக்கானலில் ஆங்காங்கே வாகன போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;

Update: 2019-06-08 13:47 GMT
கொடைக்கானலில்  சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் தற்போது குளுகுளு சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி இன்று காலை முதலே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சுமார் 10  கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்நிலையில் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பகல் 12 மணி முதல் மேகங்கள் சூழ்ந்த ரம்மியமான சூழ்நிலை காணப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்