அம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்

சென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2019-05-26 21:22 GMT
சென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. சென்னையை அடுத்த, மணலி, சடையங்குப்பம், பர்மா நகரில் உள்ள பீலிக்கான் முனிஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும், வைகாசி மாதத்தில், தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, கடந்த, 17 ம் தேதி, கொடியேற்ற நிகழ்வுடன் விழா துவங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, விமர்சையாக நடைபெற்றது. தீச்சட்டி ஏந்தியும், காவடி சுமந்தும், அலகு குத்தியும், ராட்சத வேல், கூண்டு வேல் அணிந்தும், நகரின் முக்கிய வீதிகளில், பக்தர்கள் வலம் வந்தனர். ஊர்வலத்தின் முன், முளைப்பாரி தலையில் சுமந்தபடி பெண்கள் அணிவகுத்தனர். பின்னர், கோவில் முன் தயார் செய்து வைத்திருந்த, அக்னி குண்டத்தில், பக்தி பரவசத்துடன் இறங்கி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்