அதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்

மீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-21 02:25 GMT
மீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அன் டி என்ற அதானி குழுமத்தின் துறைமுகம் இயங்கி வருகிறது. இங்கு சரக்குகளை எளிதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புதிதாக சரக்கு ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காட்டுப்பள்ளி கிராம மக்கள் மணல் அல்லும் இயந்திரங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்