வன விலங்குகளின் தாகம் தீர்க்க சரணாலயத்தில் 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகம்

வேதாரண்யம் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-14 11:30 GMT
வேதாரண்யம் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் மினி டேங்கர் மூலம் பதினைந்தாயிரம் லிட்டர் தண்ணீரை சிமெண்ட் தொட்டிகளில் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

விலங்குகளின் தாகம் தீர்க்க செயற்கை தொட்டிகளில் நீர் : யானைகளுக்கு குடற்புழு நோயை தடுக்க தாது உப்புக்கட்டிகள்

சத்தியமங்கலத்தில் யானைகளுக்கு ஏற்படும் குடற்புழு நோயை தடுக்க வனத்துறையினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் சத்தியமங்கலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்குள்ள புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க செயற்கை தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகளுக்கு குடற்புழு நோய் ஏற்படாமல் தடுக்க தாது உப்புக்கட்டிகளை தொட்டி அருகே வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்