வேலூரில் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்கள் கடும் அவதி
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போதே வேலூரில் வெயில் கொளுத்தி வருகிறது.;
கடந்த சில நாட்களாக வேலூரில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. மேலும் அனல் காற்றும் வீசுவதால் பிற்பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.