"தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-04-21 10:44 GMT
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மே 27-ஆம் தேதி வரை 
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவித் திட்டங்களையும், மக்களுக்குத் தேவையான மற்ற நலத்திட்டப் பணிகளையும் செயல்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்