களைகட்டிய கொடைக்கானல் குளுகுளு சீசன் - விடுதி கட்டணம் கிடுகிடு உயர்வு

தொடர் விடுமுறையை அடுத்து கொடைக்கானல் நகரில் குளுகுளு சீசன் களைகட்ட துவங்கியது.

Update: 2019-04-20 19:34 GMT
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி படை எடுத்தனர். இயற்கை எழில் காட்சிகளை கண்டு களித்ததுடன் ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர். பிரையன்ட் பூங்காவில் பூக்க தொடங்கியுள்ள பூக்களையும் கண்டு ரசித்தனர்.அதிக வாகனங்கள் வருகை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சுற்றுலா இடங்களுக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். நகரில் பல்வேறு தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டதன் காரணமாக தங்குவதற்கு அறைகள் கிடைக்காததால் விடுதிகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்