"பயோமெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துங்கள்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Update: 2019-04-12 03:34 GMT
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அரசு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், உபரி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு 444 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கையை நேர் செய்யும் வரை புதிய ஆசிரியர் நியமனம் செய்யக்கூடாது என்றும், பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்