Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14.12.2025) | 7 PM Headlines | Thanthi TV
உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் போண்டி பீச்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.. காவல் அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்...
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை தனி ஒரு நபராக போராடி தடுத்து துப்பாக்கியை பிடுங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.... பல பேரின் உயிரை பாதுகாத்த இளைஞரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்....
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்த காட்சிகள் வெளியானது...
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.... உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள பிரதமர், ஆஸ்திரேலிய மக்களுக்கு, இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளார்...
மும்பை வான்கடே மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.... மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சச்சின் இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி நேரில் வரவேற்ற நிலையில், கால்பந்து போட்டியை மெஸ்ஸி தொடங்கி வைத்தார்....
வடநாட்டில் பாஜக வெற்றி பெற்றாலும், தமிழ்நாட்டில் பாஜக நுழைய முடியாது என திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக என்ஜின் இல்லாத வண்டியாக இருப்பதாகவும், பாஜகவிடம் இருந்து அதிமுகவை காக்க வேண்டும் எனவும் சாடினார்.
உண்மையின் பக்கம் நின்று மோடி அரசை அகற்றுவோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.... டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வாக்கு திருட்டு என்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் என்று விமர்சித்தார்...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவுபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.... 815 வாக்காளர்கள் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து தரவில்லை என்றும், வரும் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
ஈரோட்டில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.... விஜயமங்கலம் அருகே நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்படுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.....
உலகப் புகழ்பெற்ற WWE ஜாம்பவான் ஜான் சீனா, தனது கடைசி போட்டியில் தோல்வி அடைந்தார். WWE நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து ஜான் சீனாவை நெகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.