உ.பி மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நியமனம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அடுத்த பாஜக தலைவராக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரியை பாஜக நியமித்துள்ளது. அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அக்கட்சியை வழிநடத்தும் 4வது குர்மி இன தலைவர் ஆவார். 61 வயதான இவர் அம்மாநிலத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினரில் ஒன்றான செல்வாக்கு மிக்க குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர். கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் தொகுதியிலிருந்து 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கஜ், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இதையடுத்து புதிய மாநில பாஜக தலைவர் நியமனத்தை லக்னோவில் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர்.