தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கு - 9 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது;

Update: 2019-03-21 10:14 GMT
கடந்த 2007 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள தினகரன் அலுவலகம் தீவைத்து எரிக்கப் பட்ட போது , கோபிநாத், வினோத்குமார், முத்துராமலிங்கம் ஆகிய மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 17 பேர்களையும் 2009 ஆம் ஆண்டு விடுதலை  செய்தது..  இதனை எதிர்த்து, சிபிஐ மற்றும் உயிரிழந்த வினோத்குமாரின் தாயார் பூங்கோதை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், சி.என்.பிரகாஷ், புகழேந்தி அடங்கிய அமர்வு, அட்டாக் பாண்டி, ராமையா பாண்டியன், மாணிக்பாஷா உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த‌து.  குற்றம்சாட்டப்பட்ட மற்ற 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நீதிபதிகள், வழக்கை முதலில் விசாரித்த அப்போதைய டி.எஸ்.பி., ராஜாராம் தண்டனை விபரம் வருகிற 25 ஆம் தேதி அறிவிக்கப்பதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்