சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு
இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்
ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு, தென்காசிக்கு திரும்பி கொண்டிருந்த குடும்பத்தினரின் கார் மீது, பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செங்கல் ஏற்றி வந்த லாரி , எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த 5 பேர் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.