தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகளுக்கு உதவி

டேங்கர் லாரி மூலம் நீர்குட்டைகளுக்கு தண்ணீர் விநியோகம்

Update: 2019-03-11 21:09 GMT
கோவை வனக்கோட்டத்தில்சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில காட்டுயானை,காட்டெருமை,கரடி,சிறுத்தை,புலி,மான் இனங்கள்,செந்நாய்,காட்டுப்பன்றி உள்ளிட்டவை வசித்து வருகின்றன .வனத்தில் வறட்சி நிலவுவதால், அவை வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன அவற்றிற்காக அமைக்கப் பட்டுள்ள ஓடந்துறை தண்ணீர் தொட்டிக்கு வாரம் ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர்நிரப்பப்படுகிறது.வனவிலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக நீர்நிலைகளில் தாதுசத்துகள் நிறைந்த உப்புக்கட்டிகள் வைக்கப்பட்டன. மேலும் 3 தொட்டிகளுக்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றது.
Tags:    

மேலும் செய்திகள்