ரூ.2,000 நிதியுதவி வழங்க தடை கோரி வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள், ஏழைகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-06 00:22 GMT
விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த இந்த பொது நல வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.அப்போது, முதலில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு உதவிதொகை வழங்கப்படும் என கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக தற்போது ஏழைகளாக கருதப்படுபவர்களின் விவரங்களையும் சேகரிக்கும் வகையில் தற்போது படிவங்களை விநியோகித்து வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி எனவும், இதனை மனுதாரர்  எங்கிருந்து பெற்றார் என, அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது விண்ணப்பங்கள் மட்டுமே  பெறப்பட்டு வரும் நிலையில், யார் யாருக்கு உதவிதொகை வழங்குவது என பின்னர் முடிவு செய்யப்படும் எனவும்  தெரிவித்தார்.இதையடுத்து, அரசாணை யாரிடம் பெறப்பட்டது என்பது குறித்து விளக்க மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகளாக கருதப்படுபவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்