மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை...
ஒசூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது.;
ஒசூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அலகு குத்துதல், பால் குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட மாசாணி அம்மன் சிலைக்கு எலுமிச்சை பழங்கள், காய்கறிகள், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மயானபூஜை நடத்தப்பட்டது. மேள தாளங்கள் முழங்க பூசாரி கைகளில் சூலாயுதத்துடனும், வாயில் எலும்பு துண்டுகளுடனும் சாமி வந்து ஆடினார்.