காவல்துறை வாகனம் மோதி 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.;
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி சென்றபோது, அவரின் பாதுகாப்பிற்கு, விழுப்புரத்தில் இருந்து சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்றிருந்தனர். அவரை விட்டு விட்டு மீண்டும் விழுப்புரம் திரும்பிக் கொண்டிருந்தபோது, கெங்கராம்பாளையம் என்ற இடத்தில் காவல்துறை வாகனம் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டது. இதில் மாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் மண்ணாங்கட்டி, கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்த பாபு, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த திருமுருகன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.