திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற டிசம்பர் 29ம் தேதி அன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு, வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாகவும், கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.மேலும், கழக பொதுச்செயலாளர் துரைமுருகன்,எம்எல்ஏ செந்தில் பாலாஜி, அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.