நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு : முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

கோவை அருகே அமைக்கப்பட்டுள்ள நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2019-02-06 07:24 GMT
நாராயணசாமி நாயுடுவின் சொந்த ஊரான வையம்பாளையத்தில், நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ,எம்.பிக்கள். எம்.எல்.ஏக்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு சட்டக்கல்லூரியில் 10 கோடியே 16 லட்சம் ரூபாய் மதி்ப்பீட்டில் நூலகம் மற்றும் கலையரங்கம், கவுண்டம்பாளையம் பகுதியில்  3 கோடியே 55 லட்சம் ரூபாய்  மதிப்பில் ஒருங்கிணைந்த தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க  அலுவலகம் உள்பட பல திட்டங்களுக்கு முதமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில், முதலமைச்சருக்கு காளை மாடு பரிசாக வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்