வறட்சியில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை, வேளாண்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

வறட்சியில் இருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேம்பம்பாளையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

Update: 2019-01-30 22:35 GMT
வறட்சியில் இருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேம்பம்பாளையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. வறட்சியால் மரக்கன்றுகள் பட்டுப் போகும் பிரச்சினை காரணமாக, மேட்டுப்பாங்கான இடத்திலும், மானாவாரி நிலங்களிலும் தோப்பை உருவாக்குவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாகவே  உள்ளது. தற்போது அறிமுகம் ஆகி உள்ள வேர்மண்டல நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் காரணமாக செடிகளின் வளர்ச்சி அதிகரிப்பதுடன், விரைவில் வேரூன்றி மரமாகிறது. இதனால் நீர்த்தேவையும், நீர்பாய்ச்சும் செலவுகளும் குறைவதாக கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்