நிசான் நிறுவனத்தின் புதிய கார்

"நிசான் கிக்ஸ்" கார் அறிமுகம்

Update: 2019-01-23 09:59 GMT
அதிக வசதிகளுடன் கூடிய புதிய காரை நிசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. "நிசான் கிக்ஸ்" என்ற புதிய காருக்கான அறிமுக விழா சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நிசான் மோட்டார் இந்தியா  நிறுவனத்தின் விநியோகத்துறை  துணைத் தலைவர் பீட்டர் க்ளிசால்டு, புதிய வாகனத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அப்போது, பெட்ரோல்,டீசல் என இரு  மாடல்களிலும் தயாரிக்கப்பட்ட இந்தக் கார் 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பதாக அவர் தெரிவித்தார். Intelligence choice of ownership திட்டத்தின் மூலம் முன்பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. கார் வாங்கும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டுகால வாரண்டி, பராமரிப்பு கட்டணம், சாலையோர சேவை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்