பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை : புத்துயிர் பெற்ற துணிப்பை உற்பத்தி

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலால், அனைத்து வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகளை வழங்கி வருகின்றன.;

Update: 2019-01-12 06:40 GMT
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலால், அனைத்து வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகளை வழங்கி வருகின்றன. தேவை அதிகரித்திருப்பதால், பின்னலாடை நிறுவனங்கள் துணிப்பை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. சிறியது முதல் பெரிய அளவிலான துணிப்பைகள் தயாரிப்பதால் அதற்கேற்றார் போல் விலை ஏற்ற இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருப்பதால், இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சீரான பணி மற்றும் ஊதியம் கிடைக்கும் என தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்