நாளமில்லா சுரப்பி தொடர்பான நோயால் அவதிப்படும் இளம்பெண் : நடனத்திறமையால் பல்வேறு விருதுகள் குவிப்பு

கடலூரில், நாளமில்லா சுரப்பி தொடர்பான நோய் கொண்ட பெண் ஒருவர், தமது நடனத் திறமையால், நூற்றுக்கணக்கான விருதுகளையும், உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.

Update: 2019-01-10 20:15 GMT
கடலூரைச் சேர்ந்த அமிர்தராஜ் - ஜீவா தம்பதியினரின் ஒரே மகளான ஏஞ்சலின் செரில், கான்ஜெனிடல் அட்ரினல் ஹைபர்ப்ளாசியா (Congenital adrenal hyperplasia ) எனும்   நோயால் அவதிப்பட்டு வருகிறார். 

இந்நோயை குணப்படுத்த முடியாது.  அதே சமயம், மரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப் போட முடியும் என மருத்தவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தமது நடனத்திறமையால்,  ஏஞ்சலின் செரில், கடலூர் சிறகுகள் என்ற அமைப்பின் மூலம் 800 க்கும் மேற்பட்ட மேடைகளில் ஆடி அசத்தி வருகிறார். குறிப்பாக, பரதநாட்டியம், கிராமிய நடனம், மேற்கத்திய நடனம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், குச்சிப்புடி நடனங்களை ஆடுவதில் வல்லவராக திகழும், ஏஞ்சலின், திருநங்கைகளுக்கு இலவசமாக நடனம் கற்றுத்தர வேண்டும் என்பதே தமது விருப்பம் என கூறுகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்