400 ஆண்டுகளுக்கு முன் ஜல்லிகட்டு வீரருக்கு கட்டப்பட்ட அழகு கோவில்

திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி அழகு கோவில், தங்களுக்கு குலதெய்வம் போன்றது என ஜல்லிக்கட்டு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.;

Update: 2019-01-06 09:04 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சொரிக்காம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிர் நீத்த அழகு என்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கோயில் கட்டப்பட்டது. அந்த கோவில் இன்றும் அவருடைய சந்ததிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு செல்லும் வீரர்கள், சொரிக்காம்பட்டி அழகு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு செல்கின்றனர். அழகு கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு செல்லும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பரிசு நிச்சயம் எனவும் திருமங்கலம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்