மாற்று வேலை வழங்கக் கோரி பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-31 10:34 GMT
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், தண்ணீர் பாக்கெட், சாப்பாட்டு பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பிளாஸ்டிக் மீதான தடை நாளை அமலுக்கு வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு நிறுவனங்கள்  மூடப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்த வந்த பெண் தொழிலாளர்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம்  மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்