கொடைக்கானல் நட்சத்திர வடிவ ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

கொடைக்கானல் நட்சத்திர வடிவ ஏரியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

Update: 2018-12-22 11:01 GMT
கொடைக்கானல் நட்சத்திர வடிவ ஏரியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர். இந்த ஏரியை தூய்மைப் படுத்த கடந்த காலங்களில் சுமார் 88 கோடி நிதி ஒதுக்கப்பட்டும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், ஏரியில் மிதக்கும் நீர்தாவரங்கள் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்