ஸ்டெர்லைட் விவகாரம் : டி.டி.வி. தினகரன் கருத்து

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு, தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-12-15 16:01 GMT
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு, தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையை கூட்டி, தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என கொள்கை முடிவு எடுத்து, தீர்மானம் நிறைவேற்றி, அதன் பின் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஒருபக்கம் சட்டப்போராட்டங்கள் நடந்தாலும், அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இந்த ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமது அறிக்கையில்  டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்