மல்லிகை, சம்பங்கி கிலோ தலா ரூ. 2 ஆயிரம்...
'கஜா' புயல் பாதிப்பால் புதுக்கோட்டை பகுதிகளில் மலர் சாகுபடி முடங்கிய நிலையில், சந்தைக்கு வரும் வெளியூர் பூக்களின் விலை, கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது;
'கஜா' புயல் பாதிப்பால் புதுக்கோட்டை பகுதிகளில் மலர் சாகுபடி முடங்கிய நிலையில், சந்தைக்கு வரும் வெளியூர் பூக்களின் விலை, கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆலங்குடி கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, கறம்பக்குடி திருவரங்குளம் உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் செய்யப்பட்டு வந்த மலர்கள் அனைத்தும் புயலில் அழிந்தன. உள்ளூர் சாகுபடி முடங்கியதால், இறக்குமதியாகும் மலர்களின் விலை, கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விழாக்கால நேரத்தில், மலர்களின் விலை அதிகரிப்பால் வியாபாரிகளும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.